/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
45 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு
/
45 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் அதிரடியாக மீட்பு
ADDED : ஜன 29, 2025 10:29 PM
சூலுார்; அக்கநாயக்கன்பாளையத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த, 45 சென்ட் நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம் அக்கநாயக்கன்பாளையம் கிராமத்தில், தனி நபர் ஒருவர், அரசுக்கு சொந்தமான, 45 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டி, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பல புகார்கள் வருவாய்த்துறைக்கு சென்றது. இதையடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள எச்சரித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளாததால், சூலுார் தாசில்தார் தனசேகரன் உத்தரவின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று, பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றினர். அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

