/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தன்னார்வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி
/
தன்னார்வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி
ADDED : அக் 23, 2025 12:27 AM
கோவை: கோவை மாவட்டத்தில் தீயணைப்பு இயக்குனர் உத்தரவின் பேரில், பேரிடர் காலங்களில் தீயணைப்பு துறையினருடன் இணைந்து, தன்னார்வலர்களும் மீட்பு பணிகளில் ஈடுபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 45 வயதுக்கு உட்பட்ட தன்னார்வலர்களுக்கு தீயணைப்பு துறை சார்பில், 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்பது தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றனர்.
இவர்களுக்கு தீ மற்றும் விபத்து காலங்களில் செயல்படும் முறைகள், தீயணைப்பு, உயிர்மீட்பு குறித்த பயிற்சிகள், நீச்சல், முதலுதவி பயிற்சி ஆகிய துறை சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நேற்றுடன் பயிற்சி முடிந்த நிலையில், எழுத்து தேர்வு நடந்தது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறுகையில், ''தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும், பயிற்சிக்கு இணையாக, தன்னார்வலர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி பெற்றவர்கள் கோவை தெற்கு, பொள்ளாச்சி, சூலூர், பீளமேடு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற உள்ளனர். இவர்கள் தீ விபத்து பணிகள், வி.ஐ.பி., பாதுகாப்பு ஆகிய பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். பணிக்கு ஏற்ப, மாத ஊதியம் வழங்கப்படும்,'' என்றார்.