/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணிக்கடையில் தீ; அதிகாலையில் பரபரப்பு
/
துணிக்கடையில் தீ; அதிகாலையில் பரபரப்பு
ADDED : அக் 23, 2025 12:29 AM

கோவை: ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில், அதிகாலையில் தீ பிடித்தது.
பாபு என்பவருக்கு சொந்தமான, இந்த துணிக்கடையின் இரண்டாவது மாடியில் நேற்று அதிகாலை திடீரென கரும்புகையுடன் தீப்பிடித்தது.
அப்பகுதியில் இருந்த செக்யூரிட்டிகள், கடை உரிமையாளருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையிலான வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டாவது மாடியில், தீ எரிந்ததால், ஸ்கைவாக் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள், அங்கு வந்து தீயை அணைக்கும் பணியை துரிதப்படுத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடிய தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். பெரும்பாலும் அட்டை பெட்டிகளும், சில துணிகளும் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டாவது மாடியில் உள்ள சமையல் அறையில் இருந்து, தீ பரவி இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.