/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடைப்பந்து போட்டி; வென்ற அணிகளுக்கு பரிசு
/
கூடைப்பந்து போட்டி; வென்ற அணிகளுக்கு பரிசு
ADDED : அக் 23, 2025 12:29 AM

கோவை: ஒய்.எம்.சி.ஏ., கூடைப்பந்தாட்ட கழகம் சார்பாக, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், 50வது ஆண்டு கூடைந்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை ஒய்.எம்.சி.ஏ., கூடைபந்தாட்ட கழகம் சார்பாக, 50வது ஆண்டாக, இங்கு பயிற்சி பெறும் வீரர்களுக்காக, சப்- ஜூனியர் பிரிவில் 6 அணிகளும், ஜூனியர் பிரிவில் 5 அணிகளும், சீனியர்கள் பிரிவில் இரண்டு அணிகளும் கலந்துகொண்ட 'DEXPORA' விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
'DE' -தீபாவளி, 'X' கிறிஸ்துமஸ் 'PO' -பொங்கல், 'RA' - ரம்ஜான் போன்ற பண்டிகைகளை ஒருங்கிணைத்து, விளையாட்டு வீரர்களிடம் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், விளையாட்டு போட்டிகள், கடந்த 50வது ஆண்டாக நடைபெற்று வருவது, சமுதாய நல்லிணக்கத்தை காட்டுகிறது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு, வழக்கறிஞர் சண்முகம் மற்றும் ஒய்.எம்.சி.ஏ., தலைவர் ஜெயக்குமார் டேவிட் பரிசு வழங்கி பாராட்டினர்.