/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
/
பேராசிரியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
ADDED : அக் 21, 2025 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்: வெள்ளலுார், இந்திரா நகர், மேகர் அலி வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷ், 36; தனியார் இன்ஜி., கல்லூரி பேராசிரியர். கடந்த 18ல் இவர் திண்டுக்கல்லுக்கு குடும்பத்துடன் சென்றார்.
நேற்று காலை வீடு திரும்பினார். முன்கதவு உடைத்து திறக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த, 45 சவரன் தங்க நகை, ரொக்கம் ஆறாயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது. இதன் மொத்த மதிப்பு, 30 லட்சம் ரூபாய். புகாரின்படி, போத்தனுார் புலனாய்வு பிரிவு போலீசார், விசாரணை நடத்துகின்றனர்.