/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த திட்டம்: சேலம் கோட்டமேலாளர் தகவல்
/
கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த திட்டம்: சேலம் கோட்டமேலாளர் தகவல்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த திட்டம்: சேலம் கோட்டமேலாளர் தகவல்
கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த திட்டம்: சேலம் கோட்டமேலாளர் தகவல்
ADDED : அக் 21, 2025 11:46 PM
கோவை: கோவை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீபன்னா லால் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன், குடிநீர் உள்ளிட்ட அத்தியவாசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படையினர்(ஆர்.பி.எப்.,) மற்றும் ரயில்வே போலீசார், 160 பேர் கோவை ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூர் ஸ்டேஷனில், 120, ஈரோட்டில், 70, சேலத்தில், 65 பேர் என, 415 பேர் பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு, 24 மணி நேரமும் வழிவகுத்தனர். தவிர, சாரண, சாரணியர், ஓய்வுபெற்ற ஆர்.பி.எப்., வீரர்கள் பயணிகள் கூட்ட மேலாண்மையில் பங்களித்தனர்.
பயணிகள் பாதுகாப்புக்காக, 'வார் ரூம்' ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு, 85 சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வேயில் இயக்கப்பட்டன. அதில், சேலம் கோட்டத்தில் மட்டும், 12 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
கோவை, போத்தனுார் ஸ்டேஷன்களில் இருந்து தலா ஐந்து சிறப்பு ரயில்களும், மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோட்டில் இருந்து தலா ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை சமயத்தில் சேலம் கோட்டத்தில் இருந்து, 6.3 லட்சம் பேர் ரயில்களில் பயணித்துள்ளனர்.
கோவை ரயில்வே ஸ்டேஷனில், பயணிகள் தேவைக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் பயன்பாட்டுக்காக, கூடுதல் வசதிகளை இந்த ஸ்டேஷனில் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.