/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒரே நாளில் 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 'டிரான்ஸ்பர்'
/
ஒரே நாளில் 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 'டிரான்ஸ்பர்'
ஒரே நாளில் 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 'டிரான்ஸ்பர்'
ஒரே நாளில் 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 'டிரான்ஸ்பர்'
ADDED : பிப் 18, 2024 02:26 AM
கோவை:லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்க இருப்பதால், கோவை மாவட்டத்தில், ஒரே நாளில், 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்படஉள்ளது. முன்னேற்பாடு பணிகளை, தேர்தல் ஆணை யம் செய்து வருகிறது.
தேர்தல் பணிகளில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, ஒரே இடத்தில், மூன்றாண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் அலுவலர்களை இட மாறுதல் செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதில், 47 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர். தொண்டாமுத்துாரில் தணிக்கை பிரிவில் பணியாற்றிய தமிழரசி, சூலுாருக்கு மாற்றப்பட்டுள்ளார். சூலுாரில் பணிபுரிந்த சம்பத்குமார் தொண்டாமுத்துார் மாற்றப்பட்டிருக்கிறார்.
தொண்டாமுத்துாரில் மண்டலம்-2 துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய இந்திராணி, மதுக்கரைக்கும், மதுக்கரையில் பணிபுரிந்த தீபா, இவரது பணியிடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தொண்டாமுத்துார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) பணியாற்றிய ஹேமலதா, கிணத்துக்கடவுக்கு இட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். சர்க்கார் சாமக்குளம் சண்முகபிரியா சூலுார் வட்டாரத்துக்கும், சூலுார் தீபலட்சுமி தொண்டாமுத்துார் வட்டாரம் மண்டலம்-1க்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல், மாவட்டம் முழுவதும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை மாறுதல் செய்து, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.