/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் 47 மி.மீ., மழை; 43 அடியாக நீர்மட்டம் உயர்வு
/
சிறுவாணியில் 47 மி.மீ., மழை; 43 அடியாக நீர்மட்டம் உயர்வு
சிறுவாணியில் 47 மி.மீ., மழை; 43 அடியாக நீர்மட்டம் உயர்வு
சிறுவாணியில் 47 மி.மீ., மழை; 43 அடியாக நீர்மட்டம் உயர்வு
ADDED : ஆக 16, 2025 09:30 PM
கோவை; தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையானது கோவை மக்களுக்கும், வழியோர கிராமங்களுக்கும் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க உயரம், 50 அடி என்ற நிலையில் கடந்த சில நாட்களாக அணைப்பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
நேற்று முன்தினம் காலை, 8:00 மணி நிலவரப்படி அடிவாரத்தில், 20 மி.மீ., அணைப்பகுதியில், 54 மி.மீ., மழையும் பதிவாக, நீர் மட்டம், 42.38 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி, அடிவாரத்தில், 24 மி.மீ., அணைப்பகுதியில், 47 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. இதனால், நீர் மட்டம், 42.94 அடியாக சற்று அதிகரித்தது. குடிநீர் தேவைக்காக, 10.34 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது.அணையில் நீர்க்கசிவு காரணமாக, 44.61 அடி வரை மட்டுமே தண்ணீரை தேக்க கேரள நீர்ப்பாசன துறை அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.