/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுர காளியம்மன் கோவிலில் நிறுவும் 48 அம்மன் சிலைகள்
/
மதுர காளியம்மன் கோவிலில் நிறுவும் 48 அம்மன் சிலைகள்
மதுர காளியம்மன் கோவிலில் நிறுவும் 48 அம்மன் சிலைகள்
மதுர காளியம்மன் கோவிலில் நிறுவும் 48 அம்மன் சிலைகள்
ADDED : ஜூன் 29, 2025 11:46 PM

அன்னுார்; மதுர காளியம்மன் கோவிலில், 48 அம்மன் சிலைகள் நிறுவும் பணி நேற்று நடந்தது.
அன்னுார் அருகே லக்கேபாளையத்தில் 300 ஆண்டுகள் பழமையான மதுர மாகாளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பழைய கட்டிடம் அகற்றப்பட்டு, பல கோடி ரூபாயில், புதிதாக முழுவதும் கருங்கற்களால் கோவில் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, 60 டன் அளவில், கருங்கற்களில் கோவில் தளம் மற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது.
விநாயகர் மற்றும் கருப்பராயர் சாமிக்கு தனித்தனியாக கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அம்மனின் 48 அவதாரங்கள் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவற்றிற்கு நேற்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, கோவில் கோபுரத்தில் நிறுவும் பணி நடந்தது. இத்துடன் கோபுரத்தில் நெல் தானியங்களை கொண்டு நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. விமான ஸ்தூபி பொருத்தப்பட்டது. இதில் ஈஞ்ச குலத்தினர், திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
மதுர காளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.