/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதன்முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்க 48 போலீசார்; மீண்டும் குற்றம் செய்யாமல் தடுப்பர்
/
முதன்முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்க 48 போலீசார்; மீண்டும் குற்றம் செய்யாமல் தடுப்பர்
முதன்முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்க 48 போலீசார்; மீண்டும் குற்றம் செய்யாமல் தடுப்பர்
முதன்முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் வழங்க 48 போலீசார்; மீண்டும் குற்றம் செய்யாமல் தடுப்பர்
ADDED : அக் 29, 2024 11:58 PM

கோவை : முதன்முறை குற்றவாளிகள், மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க மாநகரில், 48 போலீசாரை நியமிக்க போலீஸ் கமிஷனர் திட்டமிட்டுள்ளார்.
கோவை மாநகரில் குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை தடுக்க, போலீசாரை பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
கடந்த ஓரிரு ஆண்டுகளாக, கோவை மாநகரில் ரவுடிகளின் குற்றச்செயல்கள் அதிகம் இருந்தது. போலீசாரின் தொடர் நடவடிக்கையால், ரவுடிகள் ஒழிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவரும் ரவுடிகள், குற்றவாளிகள் திருந்தி வாழ, மீண்டும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க, ஆலோசனை வழங்கப்படுகிறது.
முதல் முறை குற்றவாளிகளுக்கு, கவுன்சிலிங் வழங்குவது குறித்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அரங்கில், ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஆலோசனை கூட்டத்தில், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
முதல்முறை குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரை, சிறைக்கு அனுப்பும் முன் கவுன்சிலிங் கொடுத்தால், அவர்கள் மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது குறைகிறது.
சென்னையில் இருப்பது போல், கோவையிலும், முதன்முறை குற்றவாளிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக மாநகரில் உள்ள, 24 போலீஸ் ஸ்டேஷன்களில் தலா 2 போலீசார் என 48 போலீசார் நியமிக்கப்படுவர்.
அதில், முதல் முறை குற்றவாளிகள், எந்த சூழ்நிலையில் குற்றம் செய்கிறார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பதை விசாரித்து, மீண்டும் குற்றம் செய்யாமல் தடுக்கும் வகையில், போலீசார் அவர்களிடம் பேச வேண்டும்.
முதல் முறை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களை சிறையில் அடைக்கும் போது, பல குற்ற வழக்கில் சிறையில் உள்ளவர்களுடன் அடைக்காமல், நன்னடத்தை கைதிகள் உள்ள அறையில் அடைக்க, சிறைத்துறையினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், மனநல மருத்துவர் மோனி, போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். துணை கமிஷனர் ஸ்டாலின், சுகாசினி, உதவி கமிஷனர் (கட்டுப்பாட்டு அறை) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.