/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோவில் உண்டியலில் 48.73 லட்சம் ரூபாய் காணிக்கை
/
மருதமலை கோவில் உண்டியலில் 48.73 லட்சம் ரூபாய் காணிக்கை
மருதமலை கோவில் உண்டியலில் 48.73 லட்சம் ரூபாய் காணிக்கை
மருதமலை கோவில் உண்டியலில் 48.73 லட்சம் ரூபாய் காணிக்கை
ADDED : அக் 25, 2024 10:21 PM
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், 48.73 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக பெறப்பட்டது.
முருகனின் ஏழாம் படைவீராக, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது.
இக்கோவிலில் உண்டில் எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், நிரந்தர உண்டியலில், 47,16,504 ரூபாயும், திருப்பணி உண்டியலில், 1,57,188 ரூபாயும் என, மொத்தம், 48,73,692 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக இருந்தது.
அதோடு, 102 கிராம் தங்கமும், ஒரு கிலோ 349 கிராம் வெள்ளியும், 2 கிலோ 553 கிராம் பித்தளையும் இருந்தது. ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி கமிஷனர் நாகராஜ், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர், உண்டியல் எண்ணும் பணியை மேற்பார்வையிட்டனர். உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர்.