/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 496 கலைஞர்கள் பங்கேற்பு
/
வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 496 கலைஞர்கள் பங்கேற்பு
வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 496 கலைஞர்கள் பங்கேற்பு
வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 496 கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : நவ 12, 2025 11:26 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, வள்ளி கும்மி கலைக்குழு அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது.
காராள வம்ச கலைச்சங்கத்தின், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கலைக்குழுவின், 96வது வள்ளி கும்மி அரங்கேற்ற நிகழ்வு, காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. கோவில் அறங்காவலர் தனபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
காராள வம்ச கலை சங்கத்தின் முன்னோடி நிர்வாகி நித்யானந்தம் பங்கேற்று பேசினார். காராள வம்ச கலைக்குழு ஆசிரியர் சிவக்குமார் பயிற்சி அளித்தார். மொத்தம், 496 கிராமிய கலைஞர்கள் பங்கேற்றனர். அதில், காளியண்ணன்புதுாரை சேர்ந்த, 60 கலைஞர்கள் இடம்பெற்றனர். காமாட்சி அம்மன் கோவிலில் வாத்திய மேள தாளத்துடன், சீர்தட்டு வரிசையுடன் ஊர்வலமாக வந்து, மீனாட்சி அம்மன் கோவிலில் குழுவினர் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, வள்ளி கும்மி அரங்கேற்றம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். கிராமத்தை சேர்ந்த ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சி நடத்த தேவையான உதவிகளை செய்தனர்.

