/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி: ஆளும்கட்சியினர் தலையீடு! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி: ஆளும்கட்சியினர் தலையீடு! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி: ஆளும்கட்சியினர் தலையீடு! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி: ஆளும்கட்சியினர் தலையீடு! எம்.எல்.ஏ., ஜெயராமன் குற்றச்சாட்டு
ADDED : நவ 12, 2025 11:25 PM

பொள்ளாச்சி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஆளும்கட்சியினர் தலையீடு உள்ளது, என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.
பொள்ளாச்சி, சப் - கலெக்டர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில், அ.தி.மு.க. நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், திருஞானசம்பந்தம், செந்தில்குமார், கோவை ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜாமற்றும் கட்சி நிர்வாகிகள் நிர்வாகிகள்மனு கொடுத்தனர்.
அப்போது, கேரளா மாநில எல்லையில் உள்ள கிராமங்களில், வாக்காளர்களுக்கு இரு மாநிலத்திலும் ஓட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இறந்தவர்கள், ஊரை விட்டு சென்றவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம், என, தெரிவித்தார்.
அதன்பின், எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:
பி.எல்.ஓ.க்களை மிரட்டி, ஒரு இடத்தில் இருந்து விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும், வாக்காளர்கள், அங்கு வந்து விண்ணப்பங்களை பெற வேண்டும் என, ஆளும்கட்சியினர் கூறுகின்றனர்.
மேலும், நாங்கள் விண்ணப்பங்கள் கொடுத்தால்தான்ஓட்டு கிடைக்கும். இல்லை எனில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்காது என ஆளுங்கட்சியினர் மக்களை மிரட்டுகின்றனர்.
இப்பணியில் ஆளும்கட்சியினர் தலையீடு உள்ளது. பி.எல்.ஓ.க்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என, சப் - கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம். நாளை (இன்று) முதல் இப்பணிகளை நாங்களும் கண்காணிப்போம்.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
ஊரைவிட்டு சென்று எங்கே இருக்கின்றனர் என்று தெரியாதவர்கள்; வேறு ஊரில் குடியேறியவர்களுக்கு இரண்டு இடத்தில் ஓட்டு உள்ளது.
ஒரு இடத்தில் ஓட்டு அளிக்க வரவில்லை என்றால், கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெறலாம் என்ற தி.மு.க.வின் திட்டம் கைவிட்டு போனதால், போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

