/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சி அம்மன் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிேஷகம்
/
காமாட்சி அம்மன் கோவிலில் 4ம் ஆண்டு வருடாபிேஷகம்
ADDED : நவ 22, 2025 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆனைமலை: ஆனைமலை அன்னை காமாட்சி அம்மன் கோவிலில், 4ம் ஆண்டு வருடாபிேஷக விழா நடந்தது.
ஆனைமலை அன்னை காமாட்சி அம்மன் கோவிலில், நான்காம் ஆண்டு வருடாபிேஷக விழா நேற்று நடந்தது.விழாவையொட்டி, காலை, 9:00 மணிக்கு விநாயகர் பூஜை துவங்குகிறது. தொடர்ந்து, கலச பூஜை, ேஹாம பூஜைகள், பூர்ணாஹுதி நடைபெற்றது.
காலை, 10:30 மணிக்கு அபிேஷகம், கலச தீர்த்த அபிேஷகம், மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

