ADDED : நவ 22, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் அறங்காவலர்கள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் தலைவர் மயில்சாமி, போயர் சங்க தலைவர் கருப்பசாமி, பொருளாளர் சுப்ரமணி, செயலாளர் மகேந்திரன், முன்னாள் அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், ஜஸ்மா அறங்காவலர் முத்துமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயல் அலுவலர் தமிழ்செல்வன், கோவில் ஆய்வாளர் கோகிலவாணி பங்கேற்று பேசினர்.
அதில், அறங்காவலர் குழு தலைவராக ரவிக்குமார், அறங்காவலர் உறுப்பினர்களாக பரமேஸ்வரன், கனகரத்தினம் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
கோவில் முன்னேற்றத்துக்கும், திருப்பணிகள் முன்னெடுப்பதற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குவோர், போயர் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கோவில் கும்பாபிேஷக திருப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

