/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 சென்ட் மாநகராட்சி இடம் மீட்பு
/
5 சென்ட் மாநகராட்சி இடம் மீட்பு
ADDED : டிச 30, 2025 05:09 AM

கோவை: ஒண்டிப்புதுார் அருகே ரூ.1 கோடி மதிப்பிலான பொது ஒதுக்கீட்டு இடத்தை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் மீட்டனர்.
மாநகராட்சி கிழக்கு மண்டலம், 56வது வார்டு சவுடேஸ்வரி நகரில், மாநகராட்சி சொந்தமான ஐந்து சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் உள்ளது. ஒண்டிப்புதுார் சுங்கம் பகுதியில் இருந்து, இருகூர் செல்லும் மேம்பாலத்தின் அருகே ரோட்டை ஒட்டி, இந்த இடம் அமைந்துள்ளது. இந்த இடம், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
அங்கு கட்டடம் கட்டி,சிமென்ட் ஷீட் அமைத்து 'லேத்' செயல்பட்டு வந்தது. அப்பகுதி மக்களிடம் இருந்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு, இதுதொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்தன. கிழக்கு மண்டல நகரமைப்பு பிரிவினர் இடத்தை ஆய்வு செய்து,ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கினர். நோட்டீஸ் வழங்கியும் இடத்தை காலி செய்யாமல்இருந்தனர். கால அவகாசம் முடிந்ததை அடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் மகேந்திரன் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் பாதுகாப்புடன் கட்டடத்தை இடித்து, ரூ.1 கோடி மதிப்பிலான ஐந்து சென்ட் இடத்தை மீட்டனர்.

