/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கி ரோட்டில் பாய்கிறது சாக்கடை கழிவு நீர் செய்வதறியாமல் அபார்ட்மென்ட் மக்கள் அவஸ்தை
/
பொங்கி ரோட்டில் பாய்கிறது சாக்கடை கழிவு நீர் செய்வதறியாமல் அபார்ட்மென்ட் மக்கள் அவஸ்தை
பொங்கி ரோட்டில் பாய்கிறது சாக்கடை கழிவு நீர் செய்வதறியாமல் அபார்ட்மென்ட் மக்கள் அவஸ்தை
பொங்கி ரோட்டில் பாய்கிறது சாக்கடை கழிவு நீர் செய்வதறியாமல் அபார்ட்மென்ட் மக்கள் அவஸ்தை
ADDED : டிச 30, 2025 05:09 AM

கண்டுகொள்ளாத மாநகராட்சி வெள்ளக்கிணறு, ஆரஞ்சு பிளாசம் அபார்ட்மென்டின் சோக் பிட் நிரம்பி, சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. சாலை குழிகளில் சாக்கடை நீர் நிரம்பி அந்தப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஓராண்டாக இந்த பிரச்னை நீடித்தும் மாநகராட்சி அதிகாரிகளோ, அபார்ட்மென்ட் நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- ராகேஷ்: சாலையில் திரியும் மாடுகள் கோவைப்புதுார், 90வது வார்டு, சிவன் நகர், பரிபூரண ரோடு சந்திப்பில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. வாகனஓட்டிகள், நடந்து செல்பவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. உரிமையாளர்களிடம் அறிவுறுத்தியும் பயனில்லை. விபத்துகள் நடக்கும் முன் தகுந்த நடவடிக்கை வேண்டும்.
- பிரபாகரன்: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு கவுண்டம்பாளையம், ஸ்ரீநிவாசா நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டது. சுத்தம் செய்த பின், கழிவு மற்றும் மண்ணை சாலையிலே கொட்டியுள்ளனர். ஏற்கனவே குறுகலான சாலையில் குவிந்துள்ள மண்ணால், வாகனஓட்டிகளுக்கு மேலும் இடையூறு ஏற்படுகிறது.
- ரக்சனா: ஆபத்தான ரோடு மதுக்கரை மார்க்கெட் வி.எஸ்.என்., கார்டன் அடுத்து உள்ள டாஸ்மாக் பகுதி அருகே அதிக விபத்துகள் ஏற்படுகிறது. பாலத்தின் மேலே இருந்து வரும் வாகனங்களும், சுந்தராபுரம் நோக்கி செல்லும் வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் விபத்து ஏற்படுகிறது. வேகத்தடை அமைப்பதுடன், தெருவிளக்கு வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
- பிரபு: போக்குவரத்து நெருக்கடி அவிநாசி ரோடு, சிட்ரா அருகே, நேரு நகர் பகுதியில் தினமும் காலை, மாலை வேளையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
- சரவணன்: தொற்று நோய் அபாயம் மாநகராட்சி, 81வது வார்டு, அய்யண்ணன் வீதி, சிவன் கோவில் அருகில் சாக்கடை நீர் செல்கிறது. சாக்கடை மிகவும் பள்ளமாக உள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கியே உள்ளது. இதனால் எப்போதும் கடும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பதோடு, கொசுத் தொல்லையும் அதிகமாக உள்ளது. நோய் தொற்று அபாயம் உள்ளது.
- ரவி: சேதமடைந்த நடைபாதை டவுன்ஹால், கோவை மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைப்பாதை சிலாப்புகள் உடைந்த நிலையில் உள்ளது. அரசு மெடிக்கல் மற்றும் நெல்லை லாலா ஸ்வீட் கடை எதிர்புறம் சிலாப் உடைந்து குழியாக உள்ளது. நடந்து செல்பவர்களும் இடறி கீழே விழுகின்றனர்.
- பிரவீன்குமார்: தொடரும் விபத்துகள் மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம் முதல் ரத்தினம் பள்ளி அருகே உள்ள மேம்பாலம் வரை, சாலை நடுவில் பாதாள சாக்கடை மூடிகள் உயரமாக உள்ளன. மேடாக இருக்கும் இந்தப்பகுதி தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலை உயரத்திற்கு சமன் செய்தால், விபத்துகளை தவிர்க்கலாம்.
- கார்த்திக்: தெருவிளக்குகள் பழுது கிழக்கு மண்டலம், எட்டாவது வார்டு, 'எஸ்.பி - 28, பி - 12' மற்றும் 'பி - 13' என்ற எண் கொண்ட கம்பங்களில் பல நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுதால், விரைந்து தெருவிளக்கு பழுதை சரிசெய்ய வேண்டும்.
- செல்வக்குமார்: நடைபாதை ஆக்கிரமிப்பு கவுண்டம்பாளையம் பகுதியில் சாலையோரம் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதையை ஆக்கிரமித்து, கார்களையும் பார்க் செய்கின்றனர். இதனால், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது.
- சரவணன்:

