/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கைவினைப்பொருட்கள் தயாரிக்க 5 நாள் பயிற்சி
/
கைவினைப்பொருட்கள் தயாரிக்க 5 நாள் பயிற்சி
ADDED : அக் 16, 2024 10:10 PM
மேட்டுப்பாளையம்: வனக்கல்லூரியில், பட்டுக்கூடுகளிலிருந்து கைவினைப்பொருட்கள் உருவாக்குவது தொடர்பான பயிற்சி முகாம், ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பட்டுப்புழுவியல் துறை சார்பில், கிராமப்புறப் பெண்களை தொழில் முனைவோர் ஆக்க, பட்டுக்கூடுகளிலிருந்து கைவினைப்பொருட்கள் உருவாக்குவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி முகாம் வரும் 21ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில், பட்டுக்கூடுகளிலிருந்து பூங்கொத்து, மாலைகள், பூக்கள், வாழ்த்துமடல், பூந்தொட்டிகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை உருவாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், அவைகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்துகொள்ள 9843150775, 7598380048 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

