/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 குழுக்கள்; 30 பேர் கண்காணிப்பு
/
5 குழுக்கள்; 30 பேர் கண்காணிப்பு
ADDED : ஜூலை 29, 2025 08:34 PM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பிற்காக, மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் 5 குழுக்கள் வாயிலாக 30 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் வனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நேற்று நடைபெற்றது. வரும் வியாழக்கிழமை வாண வேடிக்கையுடன் நிறைவடைகிறது.
இத்திருவிழாவிற்காக கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். வரும் வியாழக்கிழமை வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். கோவிலுக்கு அருகில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட சுண்டப்பட்டி வனப்பகுதி அமைந்துள்ளது.
இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வரும் வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் தலைமையில், வனவர் மேற்பார்வையில் வனப்பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தற்காலிக யானை விரட்டும் காவலர்கள், என 30 பேர் அடங்கிய 5 குழுக்கள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.----