UPDATED : மே 01, 2026 11:43 PM
ADDED : மே 01, 2026 11:24 PM
மேட்டுப்பாளையம்: குறைந்தது 5 பண்டிகை நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் அமலாக்கம் சுபாஷ் சந்தர் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியிருப்பதாவது:-
தேசிய பண்டிகை தினங்களான ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2ம் தேதிகளில், சம்பளத்துடன் கூடிய விடுமுறை காட்டாயம் அளிக்கப்பட வேண்டும். மேலும், குறைந்தது 5 பண்டிகை நாட்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு இணையம் வழியாக விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற வேண்டும். கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவு சான்றினையும் இணையம் வழியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.
விடுமுறை அளிக்கப்படவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். மேலும் விடுமுறையில் பணிபுரிந்த தொழிலாளருக்கு இரட்டிப்பு ஊதியம் மற்றும் 3 தினங்களுக்குள், ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடர்பாகவும் ஆய்வு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
