ADDED : மார் 18, 2026 05:12 AM

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. 2 சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் 'அப்சர்வர்'களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
90 பறக்கும் படைகள், 90 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை கண்காணிக்கவும், அறிவுறுத்தல் வழங்கவும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
நடத்தை விதிமுறை மீறப்பட்டாலோ, பரிசு பொருட்கள் வழங்கினாலோ 0422 - 2300 156 - 159, 1800-425-0086 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 1950 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.
C----Vigil மொபைல் செயலி மூலமாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் பதிவிடலாம். கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று கட்டுப்பாடு மையத்துக்கு 17 புகார்களும், சி-விஜில் செயலிக்கு 50 புகார்களும் வந்தன. 48 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 புகார் குறித்து பறக்கும் படையினர் விசாரிக்கின்றனர்.
