/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளுங்கட்சி பிரமுகருக்காக 50 அடி திட்ட சாலை நீக்கம்! கோர்ட்டில் வழக்கு தொடர அ.தி.மு.க., முடிவு
/
ஆளுங்கட்சி பிரமுகருக்காக 50 அடி திட்ட சாலை நீக்கம்! கோர்ட்டில் வழக்கு தொடர அ.தி.மு.க., முடிவு
ஆளுங்கட்சி பிரமுகருக்காக 50 அடி திட்ட சாலை நீக்கம்! கோர்ட்டில் வழக்கு தொடர அ.தி.மு.க., முடிவு
ஆளுங்கட்சி பிரமுகருக்காக 50 அடி திட்ட சாலை நீக்கம்! கோர்ட்டில் வழக்கு தொடர அ.தி.மு.க., முடிவு
ADDED : பிப் 02, 2024 11:16 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஜோதிநகரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகருக்காக திட்ட சாலையை நீக்கம் செய்ய நகராட்சியில், தீர்மானம் கொண்டு வந்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்பதால், அ.தி.மு.க., சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகராட்சி, ஊத்துக்காடு ரோடு ரயில்வே கேட்டில் இருந்து, தனியார் பள்ளி அருகில், ஜோதிநகர் செல்லும் 50 அடி திட்ட சாலை செல்கிறது.இந்த திட்ட சாலை வழியாக மாக்கினாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மக்கள் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில், சுவாமி அபேதானந்தா சாலை (எப். 1, எப்2) மற்றும் வேதாத்திரி சாலை (எப்.4), 50 அடியாக உள்ளது.
தற்போது, இந்த ரோட்டில் எப்., 3 ரோடு மட்டும், 50 அடி சாலையில் இருந்து ஆளுங்கட்சி பிரமுகருக்காக நீக்கம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ஜோதிநகரில் உள்ள சாலைகள், 50 - 60 அடி வரை அகலமாக உள்ள சூழலில், இந்த திட்ட சாலையை மட்டும் மாற்றினால் பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
அ.தி.மு.க., கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா கூறியதாவது:
நகராட்சி சாதாரண கூட்டத்தில், ஜோதிநகரில் இரண்டு ஏக்கர் உள்ள நிலம் பொது உபயோகம் பகுதியாக விரிவு அபிவிருத்தி திட்டம், 12ல் அமைகிறது.திறந்தவெளி மற்றும் உபயோக பகுதியை குடியிருப்பு பகுதியாக மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதை கண்டிக்கிறோம். இந்த தீர்மானத்தில், திட்ட சாலையை நீக்க வேண்டும் என, யார் கேட்டுள்ளனர்; யார் விண்ணப்பித்தனர் என்ற விபரங்கள் இல்லை.
திறந்தவெளி மற்றும் பொது உபயோகம் என குறிப்பிட்டுள்ள நிலையில் எத்தனை சதவிகிதம், பொது உபயோக பகுதி, திறந்தவெளி என குறிப்பிட்டு தெரிவிக்கப்பட்டாலும் இதை மாற்றம் செய்வது விதிகளுக்கு புறம்பானதாகும்.
மேலும், இந்த நிலத்தில் அமையவுள்ள, 50 அடி திட்ட சாலையை நீக்கம் செய்தால் எதிர்காலத்தில் நகர வளர்ச்சியின் போது, சாலைகளை விரிவுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு நகரின் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும்.
இது ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி, மற்ற திட்ட சாலைகளையும் நீக்கம் செய்ய வசதியாக மாறிவிடும். ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிக்காக இதை மாற்றம் செய்து தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுகுறித்து, நகராட்சி கூட்டத்தில் பேச எழுந்ததும், தீர்மானங்கள், 'ஆல்பாஸ்' எனக்கூறி தலைவர், தி.மு.க., கவுன்சிலர்கள், அதிகாரிகள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுவரை நகராட்சியில் தி.மு.க., - அ.தி.மு.க., வை சேர்ந்தவர்கள் பொறுப்பில் இருந்துள்ளனர். அப்போது இதுபோன்று நடந்ததில்லை. தற்போது, திட்ட சாலையே நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வந்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

