/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 50 விநாயகர் சிலைகள்
/
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 50 விநாயகர் சிலைகள்
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 50 விநாயகர் சிலைகள்
தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 50 விநாயகர் சிலைகள்
ADDED : ஆக 01, 2025 09:31 PM
கோவை ; தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், கோவை அலுவலகத்தில் நடந்தது.
மாநில இணை பொது செயலாளர் வக்கீல் விஜயகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதலுக்கு, உறுதுணையாக இருக்கும் அந்நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
'கோவை மாநகர மாவட்டத்தில், தமிழ்நாடு விஷ்வஹிந்து பரிஷத் சார்பில், 50 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
ஆதினங்கள் மீது பொய் வழக்கு பதிவதை, தமிழக அரசு தடுக்க வேண்டும், போடபட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், பேரூர் சிவன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்ததை அகற்ற வேண்டும்' உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழு நிர்வாகிகள் ஹரிபிரசாத், கோட்ட தலைவர் பிரசாந்த், செயலாளர் ஜெய் கிருஷ்ணன் பிரதீப் ராஜ் அஜித்குமார் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.