/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
50 மணி நேர கிரிக்கெட் விதிகள் பயிற்சி வகுப்பு
/
50 மணி நேர கிரிக்கெட் விதிகள் பயிற்சி வகுப்பு
ADDED : நவ 19, 2025 01:21 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் கிரிக்கெட் நடுவர்களுக்கான, 50 மணி நேர பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இம்மாதம் கடைசி வாரத்தில் துவங்கும் வகுப்பில் கிரிக்கெட் விதிகள், 'ஸ்கோர்' கணக்கிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்ச்சி பெறுபவர்கள், சி.டி.சி.ஏ., குழுவில் இடம் பெறுவர். இவர்கள் 'லீக்' போன்ற போட்டிகளுக்கு நடுவர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர். விண்ணப்பங்களை ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்படும் சி.டி.சி.ஏ., அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும், 20ம் தேதிக்குள்(காலை, 11:00 முதல் மாலை, 6:00 மணி வரை) சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை, 97877 40390 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

