/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திரவ உயிர் உரங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி
/
திரவ உயிர் உரங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி
ADDED : மே 05, 2025 11:23 PM
கோவை,; வறட்சியிலும் கைகொடுக்கும் உயிர் உரங்கள், 50 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படுவதாக, வேளாண் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள அறிக்கை:
வேளாண்மையில் ரசாயன உரம், பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகள் பயன்பாட்டைக் குறைத்து , நஞ்சில்லா விவசாயம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, அனைத்து பயிர்களுக்கும் உரிய திரவ உயிர் உரங்கள் வழங்கப்படுகின்றன.
மாவட்ட வேளாண்மை விரிவாக்க மையங்களில், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன.
திரவ உயிர் உரங்களில், ஒரு மில்லி லிட்டரில் வீரியம் மிகுந்த பாக்டீரியா பத்துகோடி உள்ளன. 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அதிக வெப்பநிலையைத் தாங்கும். எளிதாகக் கையாளலாம்.
திரவ உயிர் உரங்களைப் பயன்படுத்துவதால், 30 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. இலைகள் எப்போதும் கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.
கூடுதல் விவரங்களுக்கு, வேளாண் உதவி இயக்குநர்கள் அல்லது தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க ஆலோசகரை, 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.