/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொண்டைக்கடலைக்கு 50 சதவீத மானியம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
/
கொண்டைக்கடலைக்கு 50 சதவீத மானியம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
கொண்டைக்கடலைக்கு 50 சதவீத மானியம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
கொண்டைக்கடலைக்கு 50 சதவீத மானியம்; விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு
ADDED : செப் 25, 2024 12:11 AM
கோவை : கொண்டைக்கடலை சாகுபடிக்கு உகந்த பருவம் துவங்கியுள்ள நிலையில், 50 சதவீத மானியம் பெற, விவசாயிகளுக்கு, கோவை மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
வேளாண் இணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை மாவட்டத்தில், 8,608 எக்டர் பரப்பில், பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில், கொண்டைக்கடலை மட்டும் 1,204 எக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது.
கொண்டைக்கடலை விதைப்புக்கு நவ., மாதம் நல்ல பருவமாகும். கோவை மாவட்டத்தில், அக்.,ல் 118 மி.மீ., நவ.,ல் 89 மழை சராசரியாக பதிவாகிறது. கொண்டைக்கடலை விதைப்புக்கு மட்டுமே மழை தேவை. அதிக அளவில் பனிப்பொழிவு மட்டுமே தேவைப்படுகிறது.
'என்பெக் 47' மற்றும் 49 சாகுபடிக்கு ஏற்ற ரகங்கள். இவை 105 நாள் பயிர்கள். 'என்பெக் 47' ஏக்கருக்கு 10 குவிண்டால் மகசூல் தரும். 'என்பெக் 49' 8 குவிண்டால் மகசூல் தரும்; வாடல் நோயைத் தாங்கவல்லது.
ஏக்கருக்கு 30 கிலோ விதை தேவை. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் பயறு வகை திட்டத்தின் கீழ், கொண்டைக்கடலை விதைகள் 50 சதவீத மானியத்தில், அதிகபட்சம் கிலோ ரூ.50க்கும்; டிரைகோடெர்மா விரிடி 50 சதவீத மானியத்தில், எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.500க்கு மிகாமலும், பயறு நுண்ணூட்டம் 50 சதவீதத்தில், ரூ.500க்கு மிகாமலும் மானியத்தில் வழங்கப்படுகிறது.
கூடுதல் விவரங்களுக்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.