/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பவர் டில்லர், பவர் வீடருக்கு 50 சதவீத மானியம்; விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

ADDED : ஜூலை 15, 2025 08:51 PM
கோவை; கோவை மாவட்டத்தில் வேளாண் கருவிகள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.
இதுதொடர்பாக, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி அறிக்கை:
வேளாண் உற்பத்தியில் வேளாண் கருவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வேளாண் கருவிகள் பெறுவதற்காக, குறு, சிறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு கோவை மாவட்டத்தில், பவர் டில்லர் மற்றும் பவர் வீடர் கருவிகள் வினியோகம் செய்யப்படுகின்றன.
பவர் டில்லர் கருவிக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 1.2 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. காரமடை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு வட்டாரங்களில் இந்த மானியத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
பவர் வீடருக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. காரமடை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு, ஆனைமலை வட்டாரங்களில் இத்திட்டம் அமலில் உள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய, வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை அணுகலாம். அல்லது தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க மாவட்ட ஆலோசகரை 99449 77561 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.