/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 50 வயது நபர் கல்லால் தாக்கி கொலை
/
கோவையில் 50 வயது நபர் கல்லால் தாக்கி கொலை
ADDED : ஆக 28, 2025 06:58 AM
கோவை; அடையாளம் தெரியாத நபரை, கல்லால் தாக்கிக் கொன்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, செல்வபுரம், பேரூர் போலீஸ் சோதனை சாவடி அருகே நொய்யல் ஆறு வாய்க்கால் பகுதியில், ஒரு ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
இறந்து கிடந்தவரின் தலையில், கல்லை துாக்கி போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. வயது, 50 இருக்கலாம் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளார். அவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. பிச்சை எடுப்பவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து, 'சிசி டிவி' காட்சி அடிப்படையில், சிலரை பிடித்து விசாரித்து வந்தனர்.
அதில், அடையாளம் தெரியாத நபரை கொலை செய்தது, பேரூரை சேர்ந்த விஜய்,25, என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைதாகி, ஜாமினில் இருக்கும் விஜய், நேற்று முன்தினம் இரவு, நொய்யல் வாய்க்கால் பகுதிக்கு சென்றுள்ளார். அடையாளம் தெரியாத நபர் துாங்கியபோது, அவருடன் ஏற்பட்ட தகராறில், கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

