ADDED : மார் 10, 2026 05:38 AM

அ நிறம் | அளவு
கோவை: கடத்த முயன்ற, 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
ரயிலில் போதைப் பொருட்கள் கடத்தல், பிற பகுதிகளுக்கு ரேஷன் அரிசி கடத்துவது குறித்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாட்பாரம் 3ல் ஏராளமான மூட்டைகள் இருந்தன.
சோதனையில் அவை ரேஷன் அரிசி மூட்டைகள் எனத் தெரிந்தது. இதையடுத்து, 500 கிலோ எடை கொண்ட, 21 மூட்டைகளை போலீசார் கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட மூட்டைகள் பறக்கும் படை சிறப்பு தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
