/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்
/
இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர்
ADDED : அக் 23, 2025 11:55 PM
கோவை: தீபாவளியை முன்னிட்டு மூத்தோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 50 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு சார்பில் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இலவச வேட்டி சேலை பெறும் பயனாளிகள் 1.77 லட்சம் பேர் உள்ளன. கடந்த ஆண்டு, 78 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளிக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதியோர் பென்ஷன் பெறும் பயனாளிகளுக்கு ரேஷன்கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரத்து 107 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழக்கப்பட்டுள்ளன. வாங்காதவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில் வந்து வாங்கி கொள்ளலாம்.'' என்றார்.

