/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா
/
திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா
ADDED : ஜன 14, 2025 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:
திருமுருகன் அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா இன்று நடக்கிறது.
அன்னுார் திருமுருகன் அருள்நெறிக் கழகம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பொன்விழா இன்று மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.
திருமுருகன் அருள்நெறி கழக நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை இரவு முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.