தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வாகன சோதனையில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.52 ஆயிரம் பறிமுதல்


ADDED : மார் 19, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2024 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்:நரசீபுரத்தில், வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட, 52,500 ரூபாயை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், பணம் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம் மூலம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, நரசீபுரத்தில், முத்தரசு தலைமையிலான பறக்கும்படையினர் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணங்களின்றி, 52,500 ரூபாய் கொண்டு செல்வது தெரியவந்தது. பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, பேரூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us