ADDED : டிச 11, 2024 09:42 PM

அ நிறம் | அளவு
மாசாணியம்மன் ராஜகோபுரத்துக்கு நான்கு அடியில் ஏழு கலசங்கள்; கருவறை விமானத்துக்கு மூன்று கலசங்கள்; திசை கோபுரங்களுக்கு மூன்று அடியில், 10 கலசங்கள்; பரிவார மூர்த்திகளுக்கு ஒரு அடியில், 32 கலசங்கள், என, மொத்தம், 52 கலசங்கள் மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டன.
அவை, நா.மூ., சுங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து, மதுரை ஸ்தபதி கார்த்திக் தலைமையில், ஏழு பேர் கலசங்கள் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதில், மூன்று கலசங்களுக்கு, தங்க மூலாம் பூசப்பட்டுள்ளது.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கோவில் வளாகத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, ராஜகோபுரம், கருவறை விமானம், திசை கோபுரங்கள், பரிவார சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
