/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாரியம்மன் கோவிலில் 52ம் ஆண்டு திருவிழா
/
மாரியம்மன் கோவிலில் 52ம் ஆண்டு திருவிழா
ADDED : ஏப் 28, 2025 04:02 AM
பொள்ளாச்சி :  பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் மாரியம்மன் கோவில், 52ம் ஆண்டு திருவிழா கடந்த, 22ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 23ம் தேதி முதல் தினமும் மாலை, அம்மனுக்கு அபிேஷகம், அமுத பூஜைகள், ஆராதனைகள் நடக்கின்றன.
வரும், 29ம் தேதி மாலை, 4:30 மணிக்கு கங்கையில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், இரவு, 10:00 மணிக்கு மேல் சக்தி கும்பம் அலங்கரித்து கங்கையில் இருந்து எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. 30ம் தேதி காலை, 9:30 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு, அமுத பூஜைகள், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.மதியம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 4:30 மணிக்கு மேல் கங்கையில் இருந்து பூவோடு எடுத்தல், தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மே 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், கம்பம் மற்றும் சக்தி கும்பம் கங்கையில் விடப்படுகிறது. மே, 2ம் தேதி காலை, 10:00 மணிக்கு மறுபூஜை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

