பறக்கும் படை சோதனையில் 54 கிரிக்கெட் பேட்கள் சிக்கின
பறக்கும் படை சோதனையில் 54 கிரிக்கெட் பேட்கள் சிக்கின
ADDED : மார் 24, 2026 10:00 PM
கோவை: தேர்தல் பணிகளில் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக பணிபுரிகின்றனர். பில் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பொருட்கள், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கின்றனர். தொண்டாமுத்துார் தொகுதியில் நடத்திய சோதனையில், 54 கிரிக்கெட் பேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மாநகர் பகுதியில் 16.4 லிட்டர், புறநகர் பகுதியில் 89.84 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டன. 23ம் தேதி காலை 6 முதல் 24ம் தேதி காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில், ரூ.38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகபட்சமாக வால்பாறையில் ரூ.9 லட்சம், கிணத்துக்கடவில் ரூ.8 லட்சம், மேட்டுப்பாளையத்தில் ரூ.7.5 லட்சம், கோவை வடக்கில் ரூ.6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
நேற்று காலை 6 மணி வரை, ரூ.4.19 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சில்வர் அண்டா பறிமுதல்
வழக்கு பதிய தயக்கம்
உக்கடம் மற்றும் கடைவீதி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் தி.மு.க. வினர் பதுக்கிய சில்வர் அண்டாக்களை பறக்கும் படையினர் போலீசாருடன் சென்று, பறிமுதல் செய்தனர். கோவை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைத்து, பதிவு செய்துள்ளனர். விதிமுறைப்படி, வாக்காளர்களுக்கு பரிசு பொருள் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம். வழக்குப்பதிய, உக்கடம் மற்றும் கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் பறக்கும் படையினர் புகார் கொடுத்தனர். அதன் மீது வழக்குப்பதிய போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.
