/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை திட்டத்தில் 5,439 வீடுகள்! பயன்: ரூ.4.25 கோடி ஒதுக்கியது மாநகராட்சி
/
பாதாள சாக்கடை திட்டத்தில் 5,439 வீடுகள்! பயன்: ரூ.4.25 கோடி ஒதுக்கியது மாநகராட்சி
பாதாள சாக்கடை திட்டத்தில் 5,439 வீடுகள்! பயன்: ரூ.4.25 கோடி ஒதுக்கியது மாநகராட்சி
பாதாள சாக்கடை திட்டத்தில் 5,439 வீடுகள்! பயன்: ரூ.4.25 கோடி ஒதுக்கியது மாநகராட்சி
ADDED : அக் 18, 2025 11:41 PM

கோவை: ஒண்டிப்புதுார் பகுதியில், 5,439 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க, ரூ.4.25 கோடி ஒதுக்கியுள்ளது மாநகராட்சி. இத்தொகையை, பொதுமக்களிடம் தவணை முறையில் வசூலிக்க முடிவெடுத்துள்ளது.
கோவையில் உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதுார், வெள்ளலுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட உள்ளாட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. பழைய மாநகராட்சி பகுதிகளில் குழாய் பதித்து, 40 ஆ ண்டுகளுக் கு மேலாகி விட்டதால், கழிவு நீரின் அழுத்தம் தாங்காமல், பல இடங்களில் உடைப்பு ஏற்படுகிறது. அவற்றை மாற்றவும், விடுபட்ட இடங்களில் பதிக்கவும், மதிப்பீடு தயாரிக்கப்படுகிறது.
ஜே.என்.என்.யு.ஆர்.எம்., திட்டத்தில், ஒண்டிப்புதுாரில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டி, பல ஆண்டுகளாகி விட்டது. அப்போதே, பிரதான குழாய் பதிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, இன்னும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்காததால், சுத்திகரிப்பு நிலையம் முழு திறனில் இயக்கப்படுவதில்லை.
கிழக்கு மண்டலத்தில், 50, 52, 53, 54, 57, 58, 59, 60, 61 ஆகிய ஒன்பது வார்டுகளில் குண்டும் குழியுமாக உ ள்ள ரோடுகளை சீரமைக்கவும், புதிதாக ரோடு போடவும், தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இப்பகுதியில் 221 ரோடு போட வேண்டியிருக்கிறது.
புதிதாக ரோடு போட்ட பின், மீண்டும் தோண்டக்கூடாது என்பதற்காக, அவ்வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு, மாநகராட்சியே நிதி ஒதுக்கி இணைப்பு வழங்கி, தவணை முறையில் மக்களிடம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 5,439 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்க ரூ.4.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு, 'ஒர்க் ஆர்டர்' வழங்கி, பணிகள் துவக்கப்பட்டுள்ள ன.
ஆய்வு செய்துதான் இணைப்பு
மாநகராட்சி கமிஷனர் தகவல்
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனி டம் கேட்ட போது, ''2008ல் ஒண்டிப்புதுாரில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. விடுபட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து, அவற்றில் பணிகள் மேற்கொண்டு, சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறோம். குழாய் பதித்து பல ஆண்டுகளாகி விட்டதால், எந்தெந்த பகுதி பயன்பாட்டுக்கு உரியதாக இருக்கிறது என்பதை ஆய்வு செய்து, இணைப்பு வழங்குகிறோம். ரோடு போட வேண்டியுள்ளதால், மாநகராட்சி நிதியில் இணைப்பு வழங்கி விட்டு, பொதுமக்களிடம் தவணையில் வசூலிப்போம். முதலில், ரோட்டை வெட்டி வீட்டுக்கான குழாய் இணைப்பு கொடுத்து, 'சேம்பர்' கட்டுவோம். பொதுமக்கள் டெபாசிட் செலுத்தி, இணைப்பு பெற வேண்டும். ஒன்றரை மாதத்துக்குள் முடிக்க உள்ளோம்,'' என்றார்.