/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முடங்கிய கணக்கிலிருந்து பணம் எடுக்க முகாம்
/
முடங்கிய கணக்கிலிருந்து பணம் எடுக்க முகாம்
ADDED : அக் 18, 2025 11:42 PM
கோவை: இந்தியன் வங்கி சார்பில் முடக்கப்பட்ட வங்கி கணக்குகளிலிருந்து, வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுக்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்தியன் வங்கியின், கோவை மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பணம் டெபாசிட் செய்யப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்படாத வங்கிக் கணக்குகள், ரிசர்வ் வங்கியின் முடக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்தப் பணம், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமானது; அதைக் கோருவற்கு அவர்களுக்கு உரிமையும் உள்ளது.
இதுபோன்று முடக்கப்பட்ட கணக்கில் உள்ள பணத்தை, வாடிக்கையாளர்கள் திரும்ப பெறும் நோக்கில், இந்தியன் வங்கி அக்., முதல் 2025 டிச., வரை சிறப்பு முகாமை நடத்துகிறது.
இந்த வாய்ப்பை, வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக வாடிக்கையாளர் அல்லது அவர்களின் சட்டபூர்வ வாரிசுகள், இந்தியன் வங்கிக் கிளைகளை அணுகி, தொடர்புடைய கே.ஒய்.சி., ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.