/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.54 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு
/
ரூ.54 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு
ADDED : மார் 20, 2024 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாவட்டத்தில், 2024-25ம் நிதியாண்டில் ரூ.54 ஆயிரத்து, 207 கோடி வங்கி கடன் வழங்க, முன்னோடி வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
வேளாண்மை, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுக்கு கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு, கோவை கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்தது. கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டார்.
மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சந்திரா, கனரா வங்கி துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தானா, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலா ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

