/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லிங்க்' தொட்ட மேலாளரின் 5.50 லட்சம் ரூபாய் மோசடி
/
'லிங்க்' தொட்ட மேலாளரின் 5.50 லட்சம் ரூபாய் மோசடி
ADDED : பிப் 04, 2024 02:07 AM
கோவை;லிங்கை தொட்ட தனியார் நிறுவன மேலாளரின் ரூ.5.50 லட்சத்தை, மர்ம நபர்கள் மோசடி செய்து விட்டனர்.
கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் அறிவழகன், 37; தனியார் நிறுவன மேலாளர். கடந்த சில நாட்களுக்கு முன், அவரது மொபைல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்தது. அதில், அவரது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கணக்கிற்கு வெகுமதி பணம் கிடைத்துள்ளதாகவும், அதனை உடனடியாக பெற ஒரு லிங்க் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. உடனே அவர் அந்த லிங்கிற்குள் நுழைந்து, தனது வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தார்.
சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.5.50 லட்சம் மாயமானது. அறிவழகன் வங்கியில் விசாரித்தார். வங்கியில் இருந்து அவ்வாறு யாரும் தகவல் அனுப்பவில்லை என்றனர்.
அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.