/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார் முகாமில் 56 பேர் ரத்ததானம்
/
அன்னுார் முகாமில் 56 பேர் ரத்ததானம்
ADDED : ஜன 07, 2024 10:57 PM

அன்னுார்;அன்னுாரில் நடந்த முகாமில், 56 பேர் ரத்த தானம் செய்தனர்.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, பொகலுார் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அன்னுாரில் நேற்று ரத்ததான முகாம் நடந்தது. முகாமை பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் துவக்கி வைத்தார்.
வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜுன் பேசுகையில், ''கடந்த எட்டு மாதங்களில் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற முகாம்களிலும் நேரடியாக மருத்துவமனையிலும் 538 பேர் கோவை மாவட்டத்தில் ரத்ததானம் செய்துள்ளனர்,'' என்றார்.
ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ராம் தீபிகா பேசுகையில், ''ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை. விரைவில் மீண்டும் ரத்தம் ஊறி விடும். 18 வயது முதல் 60 வயது வரையிலான ஆரோக்கியமான இருபாலரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதன் வாயிலாக ஒரு உயிரை காப்பாற்றிய திருப்தி கிடைக்கும்,'' என்றார்.
முகாமில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 56 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில் கவுன்சிலர் மணிகண்டன், வாலிபர் சங்க நிர்வாகிகள் சுகுமார், ரமேஷ், மனோஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.