/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல்; விரைவில் நடத்த வாய்ப்பு
/
56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல்; விரைவில் நடத்த வாய்ப்பு
56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல்; விரைவில் நடத்த வாய்ப்பு
56வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல்; விரைவில் நடத்த வாய்ப்பு
ADDED : டிச 19, 2024 11:50 PM
கோவை; கோவை மாநகராட்சியில், 56வது வார்டு கவுன்சிலர் பதவி காலியாக இருப்பதால், 2025 ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், இடைத்தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கோவை மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலராக (காங்.,) இருந்த கிருஷ்ணமூர்த்தி,62, நவ., 27ல் நண்பர்களுடன் ஒண்டிப்புதுார் அருகே உள்ள பட்டணம்புதுாரில் உள்ள ஹோட்டலுக்கு சென்று விட்டு, இரவு, 9:00 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியபோது, பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இப்பதவி மற்றும் கவுன்சிலர் பதவி காலியாக இருப்பதாக, மாநகராட்சியில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநில தேர்தல் ஆணையத்துக்கும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் இதர பணிகளை ஆன்-லைன் முறையில் மேற்கொள்ள தேர்தல் பிரிவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வரும் ஜன., 6ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும். பட்டியல் வெளியிட்ட பின், சம்பந்தப்பட்ட வார்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் இடைத்தேர்தல் நடத்தி, புதிய கவுன்சிலர் தேர்வு செய்யப்படுவார்.
இதுதொடர்பாக, தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'இனி, உள்ளாட்சி அமைப்புகளில் ஏதேனும் பதவிகள் காலியானால், அடுத்த மாதமே இடைத்தேர்தல் நடத்தி, பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேர்தல் பணிகளை ஆன்-லைன் முறையில் மேற்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜன., 6ல் வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகே இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும். ஜன., இறுதியிலோ அல்லது பிப்., முதல் வாரத்திலோ நடத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது' என்றார்.