ADDED : ஆக 13, 2025 08:58 PM

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், 5வது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாள் நிகழ்ச்சிக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் தலைமை வகித்தார். வரவேற்பு குழு துணை செயலர் ஜெயராமன் வரவேற்றார். விழாவில் ரூட்ஸ் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன், பாட்டு திறந்தாலே என்ற தலைப்பில் பேசினார்.
விழாவில் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் விஸ்வநாதன், பயணியர் கல்லூரி முதல்வர் முருகேசன், வண்ணமையில் நாடகக் குழு கவிஞர் கோடீஸ்வரன், பட்டிமன்ற பேச்சாளர் பூங்கொடி பேசினர்.
நேஷனல் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் இயக்க கனகராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம், காரமடை சமையல் கியாஸ் விநியோகஸ்தர் சங்கத்தினர் செய்திருந்தனர்.