/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது; 7.55 டன் பறிமுதல்
/
ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது; 7.55 டன் பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது; 7.55 டன் பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய 6 பேர் கைது; 7.55 டன் பறிமுதல்
ADDED : நவ 26, 2024 10:21 PM
பொள்ளாச்சி; கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஆறு பேரை கைது செய்த போலீசார், 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி., மரியமுத்து மேற்பார்வையில், பொள்ளாச்சி எஸ்.ஐ., பிரபு மற்றும் போலீசார், கோவை செட்டி வீதி - பொம்மன் செட்டி காலனி ரோந்து சென்றனர்.
அப்போது, மணிகண்டன் என்பவரது வீட்டின் முன், கும்பகோணத்தை சேர்ந்த மணிகண்டன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதிவேல் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, இருசக்கர வாகனங்களில், 1,050 கிலோ ரேஷன் அரிசி சேகரித்து பதுக்கியது தெரிய வந்தது.
கோவை சிட்கோ பகுதியில் வேலை செய்யும் வடமாநில கூலித்தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய பதுக்கியதும் தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீசார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
* செட்டிபாளையம் ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே, ரேஷன் அரிசியை மற்றொரு வாகனத்தில் ஏற்றுபவர்களை பிடித்தனர். டிரைவர் ஜெயன், சதீஷ்குமார், சந்துரு ஆகியோரை கைது செய்து விசாரித்ததில், உக்கடம் கரும்புக்கடையை சேர்ந்த சிக்கந்தர், தவுபிக், அசாருதீன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து வாகனங்களில் சேகரித்து கொடுத்த, மூன்று டன் ரேஷன் அரிசியை, மற்றொரு வாகனங்களில் ஏற்றி, கேரள மாநிலம் வாளையாரை சேர்ந்த செந்திலுக்கு விற்பதற்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, சதீஷ்குமார், ஜெயன், சந்துரு மூவரை போலீசார் கைது செய்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சிக்கந்தர், தவுபிக், அசாருதீன், செந்தில் ஆகியோரை தேடுகின்றனர்.
* இதை தொடர்ந்து, எஸ்.ஐ., பூங்கொடி மற்றும் போலீசார் மைல்கல் செக்போஸ்ட் பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு வாகனத்தில், 3.5 டன் ரேஷன் அரிசி இருப்பதை கண்டறிந்தனர்.
வாகன ஓட்டுநர் மார்டினிடம் விசாரித்த போது, கரும்புக்கடையை சேர்ந்த சலீம், புதுச்சேரியை சேர்ந்த மார்டின் ஆகியோர் கூட்டாக சேர்ந்து, ரேஷன் அரிசி சேகரித்து கேரளாவில் பஷீர் என்பவருக்கு விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. மார்டினை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சலீம், பஷீர் ஆகியோரை தேடுகின்றனர்.