/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; மூதாட்டி உட்பட 6 பேர் கைது
/
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; மூதாட்டி உட்பட 6 பேர் கைது
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; மூதாட்டி உட்பட 6 பேர் கைது
போதை மாத்திரை, கஞ்சா விற்பனை; மூதாட்டி உட்பட 6 பேர் கைது
ADDED : ஜூன் 12, 2025 11:40 PM
கோவை; கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி உட்பட ஆறு பேரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை பீளமேடு, எல்லை தோட்டம் அருகில் ஒருசிலர் கஞ்சா விற்பனை செய்வதாக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அப்பகுதியில் இருந்த ஐந்து பேர், போலீசாரை பார்த்தவுடன் தப்பி செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா, போதைமாத்திரைகளை கடத்தி வந்து கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் போலீசார் சோதனை செய்த போது, 500கிராம் கஞ்சா மற்றும் 610 போதை மாத்திரைகள் இருந்தன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பீளமேட்டை சேர்ந்த அஜித் குமார், 27, இளவரசன், 21, ரத்தினபுரியை சேர்ந்த வினோத் குமார், 34, ஹரிகிருஷ்ணன், 34 ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல், 25 ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல், மதுவிலக்கு போலீசார் கவுண்டம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மூதாட்டி ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது, அவர் சாய்பாபா காலனியை சேர்ந்த ரகமத் சந்திரா, 68 என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி விற்பனை செய்வதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து, 1.210 கிலோ கஞ்சா, ரூ.4,000 பணம், இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.