/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூத்தோர் கிரிக்கெட் மகளிர் அணி தேர்வில் 60 வீராங்கனைகள் பங்கேற்பு
/
மூத்தோர் கிரிக்கெட் மகளிர் அணி தேர்வில் 60 வீராங்கனைகள் பங்கேற்பு
மூத்தோர் கிரிக்கெட் மகளிர் அணி தேர்வில் 60 வீராங்கனைகள் பங்கேற்பு
மூத்தோர் கிரிக்கெட் மகளிர் அணி தேர்வில் 60 வீராங்கனைகள் பங்கேற்பு
ADDED : நவ 13, 2024 04:53 AM
கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட மூத்தோர் பெண்கள் அணி தேர்வில், 60 பேர் நேற்று பங்கேற்ற நிலையில் நாளை ஆண்களுக்கு நடக்கிறது.
மாவட்டங்களுக்கு இடையே 'எஸ்.எஸ்., ராஜன் டிராபி' கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதற்கென, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மூத்தோர் பெண்கள் அணிக்கான தேர்வு, ஆவாரம்பாளையம், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்தது.
இதில், 60 பேர் பங்கேற்ற நிலையில் பவுலிங், பேட்டிங் ஆகியவற்றுக்கு தலா ஆறு பந்துகள் வழங்கப்பட்டன. சிறந்த முறையில் செயல்திறனை வெளிப்படுத்தியோருக்கு கூடுதலாக, பந்து வீசவும், பேட்டிங் செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆண்கள் அணி
கோவை மாவட்ட மூத்தோர் ஆண்கள் அணிக்கான தேர்வு, நாளை காலை, 9:00 மணி முதல் நடக்கிறது. இதில், 1984ம் ஆண்டு செப்., 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்தவர்களும், கடந்த, 2011ம் ஆண்டு ஆக., 31ம் தேதி அல்லது அதற்கு முன்பு பிறந்தவர்களும் பங்கேற்கலாம்.
இதற்கு, https://forms.gle/8AY2KAjhb1k9GxZ79 என்ற 'லிங்க்' வாயிலாக பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு, 80729 48889, 94420 02622 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்புகொள்ளலாம் என, சங்கத்தின் செயலாளர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.