/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
60 வயதான வேப்ப மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம்
/
60 வயதான வேப்ப மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம்
60 வயதான வேப்ப மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம்
60 வயதான வேப்ப மரம் வெட்டும் பணி தடுத்து நிறுத்தம்
ADDED : பிப் 16, 2024 01:59 AM
கோவை;ஐகோர்ட் உத்தரவை காண்பித்து, கோவையில், 60 வயதான வேப்ப மரம் வெட்டப்படுவது, தடுத்து நிறுத்தப்பட்டது.
கோவை விமான நிலையம் அருகே, பிருந்தாவன் நகர் பகுதியில், 60 வயதான வேப்ப மரம் இருக்கிறது. அருகில் உள்ள குடியிருப்புதாரர் ஒருவர், அம்மரத்தை வெட்டுவதற்கு முயற்சித்தார்.
கடந்த, 2021ம் ஆண்டு அப்போதைய வடக்கு தாசில்தாரிடம் விண்ணப்பித்து, 950 ரூபாய் என மரத்துக்கு மதிப்பீடு செய்து, வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதற்கு மாவட்ட பசுமை பாதுகாப்பு கமிட்டியில் முறையான அனுமதி பெறவில்லை. இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பால், அம்மரம் வெட்டப்படவில்லை.
இதையடுத்து, தாசில்தார் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்துமாறு, சென்னை ஐகோர்ட்டில் முறையிட்டு, அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.
அந்த உத்தரவைக் கொண்டு, வேப்ப மரத்தை வெட்டும் பணி நேற்று துவக்கப்பட்டது. இயற்கை ஆர்வலர் சையத், அப்பகுதிக்கு விரைந்து சென்று, மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினார்.
தாசில்தார், கோட்டாட்சியர் மற்றும் கலெக்டரின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றார்.
பசுமை பாதுகாப்பு கமிட்டி அனுமதி பெறாமலும், 60 வயதான மரத்துக்கு மதிப்பீடு தவறாக குறிப்பிடப்பட்டு உத்தரவு பெற்றுள்ளதால், உத்தரவை செயல்படுத்த முடியவில்லை என, ஐகோர்ட்டுக்கு விளக்கம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, வேப்ப மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது.