/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமரச தீர்வு மையத்தில் 62 வழக்கில் விசாரணை
/
சமரச தீர்வு மையத்தில் 62 வழக்கில் விசாரணை
ADDED : செப் 16, 2025 07:37 AM
கோவை; நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கக் கூடிய வழக்குகள் சமரச தீர்வு மையம் வாயிலாக, இரு தரப்பு சம்மதத்தின் பேரில், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இதன்படி, நீதிமன்றத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட, 62 வழக்குகள் கோவை மாவட்ட சமரச தீர்வு மையத்தில், நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவி வக்கீல்கள், 25 வக்கீல்கள் இரு தரப்பினர் இடையே, விசாரணை நடத்தினர்.
விசாரிக்கப்பட்ட வழக்குகளில் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டது.