/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
6,200 விபத்து இழப்பீடு வழக்குகள் 'ஜவ்வு'; 2024ல் 4,200 வழக்குகளில் தீர்வு
/
6,200 விபத்து இழப்பீடு வழக்குகள் 'ஜவ்வு'; 2024ல் 4,200 வழக்குகளில் தீர்வு
6,200 விபத்து இழப்பீடு வழக்குகள் 'ஜவ்வு'; 2024ல் 4,200 வழக்குகளில் தீர்வு
6,200 விபத்து இழப்பீடு வழக்குகள் 'ஜவ்வு'; 2024ல் 4,200 வழக்குகளில் தீர்வு
ADDED : ஜன 22, 2025 11:57 PM
கோவை; கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், 6,200 விபத்து இழப்பீடு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்தாண்டில் மட்டும், 4,200 வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், மோட்டார் வாகன விபத்துக்களில் காயம் ஏற்பட்டு, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டோர் இழப்பீடு கோரும் வழக்குகள், கோவை சிறப்பு நீதிமன்றம் (எம்.சி.ஓ.பி.,) மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி சார்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் இறப்பு தொடர்பான வழக்கு, கோவை நான்காவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், கடந்தாண்டில் விபத்து இழப்பீடு தொடர்பாக மாதந்தோறும் சராசரியாக, 380 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சராசரியாக, 350 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், கடந்தாண்டு,டிச., 31 வரை, 4,636 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல ஜனவரி- டிசம்பர் வரையில், 4,234 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன. விபத்து இழப்பீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், டிச., வரையில், 6,203 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
விபத்து இழப்பீடு தொடர்பான வழக்குகள் தேக்கம் குறைக்க, கோவையில், கூடுதலாக சிறப்பு நீதிமன்றம் திறக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், கோவையில் கோர்ட் செயல்படுவதற்கான இடப்பற்றாக்குறை காரணமாக, கூடுதல் நீதிமன்றம் திறப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. புதிய கோர்ட் திறக்கப்பட்டால், விரைவாக விசாரிக்கப்பட்டு அதிக வழக்கில் தீர்வு காண முடியும்.
விபத்து இழப்பீடு வழக்கில் தேக்கம் குறைக்க, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடத்தப்படும் 'லோக் அதாலத்' விசாரணையில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எம்.சி.ஓ.பி., கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில், பாதிக்கப்பட்டவர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் சமரசத்திற்கு பின், 'லோக் அதாலத்' விசாரணைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. இரு தரப்பினர் இடையே, சமரச தீர்வு ஏற்படுவதால், அதிக வழக்குகளில் தீர்வு காணப்படுகிறது.