/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய போட்டியில் ஆர்வம் 650 மாணவர்கள் பங்கேற்றனர்
/
இலக்கிய போட்டியில் ஆர்வம் 650 மாணவர்கள் பங்கேற்றனர்
இலக்கிய போட்டியில் ஆர்வம் 650 மாணவர்கள் பங்கேற்றனர்
இலக்கிய போட்டியில் ஆர்வம் 650 மாணவர்கள் பங்கேற்றனர்
ADDED : ஆக 10, 2025 02:24 AM
கோவை : தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள், இந்துஸ்தான் கல்லுாரி அரங்கில் நேற்று நடந்தன.
முன்னாள் டி.ஆர்.ஓ. புருசோத்தமன் துவக்கி வைத்தார். இந்துஸ்தான் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காயத்ரி ஒருங்கிணைத்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட கல்லுாரிகளை சேர்ந்த, 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
பெருமன்ற செயலாளர் ரமணி கூறியதாவது:
கல்லுாரி மாணவர்களின் படைப்பிலக்கிய ஆற்றலை வளர்க்கும் விதமாக, எட்டு ஆண்டுகளாக கலை இலக்கிய போட்டிகளை, நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு பேச்சுப் போட்டியில், 150 மாணவர்கள், கவிதை போட்டியில், 230 மாணவர்கள், ஓவியப்போட்டியில், 250 மாணவர்கள், ஓராள் நாடக போட்டியில், 20 மாணவர்கள் என, 650 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பரிசுக்கு உரிய படைப்புகள் தேர்வு செய்து, முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் நடக்கும் விழாவில், பரிசுகள் வழங்கப்படும்.