/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேல்நீராறில் 66 மி.மீ., மழை; அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
மேல்நீராறில் 66 மி.மீ., மழை; அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேல்நீராறில் 66 மி.மீ., மழை; அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேல்நீராறில் 66 மி.மீ., மழை; அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : செப் 18, 2025 09:40 PM
வால்பாறை; வால்பாறையில் பெய்த கனமழையினால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில் இந்த ஆண்டு கடந்த மே மாதம் தென்மேற்குப் பருவமழை துவங்கி தொடர்ந்து பெய்தது. இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது. இதே போல் ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளும் நிரம்பின.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பரவலாக பெய்து வரும் கனமழையில், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 160.28 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 603 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 515 கனஅடி தண்ணீர் வீதம் கேரள சோலையாறுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக மேல்நீராறில், 66 மி.மீ., மழை பெய்தது.